| உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் தேசிய பாதுகாப்பும் அவர்களுக்கான நீடித்த தீர்வும் | |
|---|---|
![]() |
இரண்டு தசாப்த காலமாக இடம்பெற்று வந்த ஆயுதப் போராட்டமானது குறைந்தது ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை அவர்களின் பாரம்பரிய வதிவிடங்களிலிருந்து இடம்பெயரச் செய்துள்ளதுடன், மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கும் வழிகோலியிருந்தது. 1997ம் ஆண்டிலிருந்தே உள்நாட்டில் இடம்பெயர்நத மக்களிடமிருந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த வண்ணம் உள்ளன. சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக யூன் 2002ல் ஆணைக்குழு இக்கருத்திட்டத்தை ஆரம்பித்தது.
மேலதிக தகவல்களை www.idpsrilanka.lk எனும் இணைய தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் |
| திட்ட அலுவலகம்
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் நீடித்த தீர்வு தொடர்பான கருத்திட்டம்
முகவரி: 65/1, முத்தையாபிள்ளை அவனியு, வார்ட் பிளேஸ், கொழும்பு 07
தொலைபேசி: 011 2662587,011 2688145
தொலைநகல்: 011 2688145
மின்னஞ்சல்: idpc@sltnet.lk
|
|
UNDP உடன் இணைந்த மனித உரிமை நிகழ்ச்சித் திட்டங்கள்இந்த இணைந்த நிகழ்ச்சித் திட்டமானது, பிராந்திய மட்டத்தில் ஆணைக்குழுவின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதாக அமைந்துள்ளது. அத்துடன், சிவில் சமூகக் கூட்டங்களையும், பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களின் கலந்துரையாடல்களையும் நடாத்துவதற்கு இத்திட்டம் உதவிபுரிந்ததுடன் HRCSL இணையதளத்தை மேம்படுத்தவும் வேண்டிய ஒத்தாசைகளை வழங்கி வருகின்றது. |
|
|
திட்ட அலுவலகம் மனித உரிமைகள் தொடர்பான கூட்டு நிகழ்ச்சித் திட்டம் முகவரி: 36/7 கின்ஸி வீதி, கொழும்பு 08 |
|
‘சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை அறிக்கையிடுவதற்கும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மக்கள் மத்தியில் துணிவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும்’ கருத்திட்டம்- UNICEFமட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதப் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சிறுவர் உரிமைகளுக்கெதிரான வன்முறைகளுக்கு சட்டப்படியான நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பான சமூக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆற்றலையும் வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளையும் மேம்படுத்துவதே இக்கருத்திட்டத்தின் இலக்காகும். பிரதேச செயலகங்களின் மட்டத்தில் இடம்பெற்ற கூட்டத் தொடர்களும், சமூக மட்டங்களில் இடம்பெற்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் இக்கருத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஊடாக இத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. |
|



