இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட இலங்கை போக்குவரத்துச் சபை

May 18, 2012

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுப்போக்குவரத்து நடைமுறையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செல்லும் இடங்களின் பெயர்ப்பலகைகள் இடப்படவேண்டும் என்று கொண்டுவந்த உத்தரவுக்கு அமைய இலங்கை போக்குவரத்துச் சபை இத்தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இபோச தலைவர், மாகாண மட்ட முகாமையாளர்களுக்கும் பஸ்நிலைய மேலதிகாரிகளுக்கும் இது தொடாபில் உரிய நடவடிக்கை எடுத்து மும்மொழிகளிலும் பஸ் செல்லும் இடங்களின் பெயர்களைக் காட்சிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். முக்கியமாக சிங்களத்திலும் தமிழிலும் இப்பெயர்கள் போடப்படுவது முக்கியம். இது தொடர்பன சுற்று நிருபம் ஏப்ரல் 9, 2012 அன்று முதல் அமுலுக்குவரும் வரையில் உரிய நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தது. இதன் முன்னேற்றம் பற்றி யூன் 23, 2012க்கு முன்னதாக உரிய அதிகாரிகள் அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான முறைப்பாடுகளை 2012 மார்ச் 27 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இமஉஆகு வின் தலைவர் விசாரித்தார்.