சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடந்த மோதல் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது

March 6, 2012

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மே 30 2011 அன்று ஏற்றுமதி வர்த்தக வலயம் அல்லது சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை சட்டத்தை மதிக்காமல் செயற்பட்ட அனைவருக்கும் எதிராக உரிய சாட்சியங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சம்வம் நடைபெற்ற மே 30 2011 அன்றைய தினமே கிடைத்த தொலைபேசி முறைப்பாட்டைப் பதிவு செய்த இமஉஆகு மறுநாள் தனது விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

 

தீவிரமாகத் தனது விசாரணைகளை மேற்கொண்ட இந்தக்குழு ஏற்றுமதி வர்த்தக வலய ஊழியரான றொ~hன் சானுகவின் மரணம் தொடர்பாக முழுமையான தகவல்களைத் திரட்டியது. கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் உள்ளடங்கலாக இக்கலவரத்துடன் தொடர்புடைய பொலிசார் கடமையில் ஈடுபடும் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் சானுக காயமடைந்த நிலையில் பராமரிக்கப்பட்ட மருத்துவ நிலையத்திற்கும் விசாரணக்குழு விஜயம் செய்திருந்தது. சம்பவத்தில் காயமடைந்த பல தொழிலாளர்களினதும் சிரே~;ட உதவிப் பொலிஸ்மா அதிபர் ரவி ஜெயவர்தன உள்ளிட்ட பல பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

 

சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்குச் சென்று பார்வையிடுவதற்கு மருத்துவமனையின் உதவிப் பெண் பணிப்பாளர் ஒருவர் தமக்கு அனுமதி மறுத்ததாகவும் குழு முறைப்பாடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் பணிப்பாளரும் சம்பவ நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த உதவிப் பணிப்பாளரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது பணிப்பாளர் மன்னிப்புக் கோரியிருந்தார்.

 

தற்போதுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குப் பதிலாக தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து கடந்த வருடம் மே 30ஆம் திகதிக்கு முன்னதாகவே பல நாட்களாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தமையை இந்தக் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

தனது விசாரணைகளின் தொடர்ச்சியாக ஆயுதம் தரிக்காத பொலிஸ் உத்தியோகத்தர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்றே முதலில் கல்லெறித் தாக்குதல் நடத்தியமை குழுவுக்குத் தெரிய வந்தது. இதில் சிரே~;ட உதவிப் பொலிஸ்மா அதிபர் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சாதாரண தர பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

 

முன்னர் பதவியிலிருந்த பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கட்டளையை மீறி சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். இக்காரணத்திற்காக சீதுவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரியாக (ஓஐசி) விளங்கியவரும் பொலிஸ் பரிசோதகர் (ஐபி) ஒருவரும் இக்குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர் என்ற விபரங்களை இவ்வறிக்கையில் குழு சமர்ப்பித்துள்ளது. ஆனாலும் இச்சம்பவத்தில் காயமடைந்த பல ஊழியர்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டபோதும் அதற்குக் காரணமானவர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை என்ற உண்மையும் குழுவுக்குத் தெரிய வந்துள்ளது.

 

மேலும் ஊழியர்கள் வேலைத்தளத்திற்குள் சென்ற பின்னரும் அவர்கள் வெளியே இழுத்து வரப்பட்டார்கள் என்ற விபரம் குழுவிற்குக் கிடைத்தாலும் அதை மேற்கொண்ட உத்தியோகத்தர்கள் யாவர் என்பதை விசாரணையிலிருந்து அறிய முடியவில்லை. இச்செயல் ஒரு குற்றச் செயலாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா அல்லது இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யமுடியுமா என்ற விபரங்களை இதுவரை குழுஅறியவில்லை.

 

நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு சேதம் விளைத்த அல்லது தொழிற்சாலையினுள்ளே பொருத்தப்பட்ட உபகரணங்களுக்கு சேதம் உண்டுபண்ணிய எந்தவொரு அதிகாரியும் இதுவரை இனங்காணப்படவும் இல்லை அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுமில்லை. இதேவேளையில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமராக்களின் ஒளிப்படப் பதிவுகள் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளினால் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

கண்ணீர்புகை பிரயோகித்தல் என்பது குறைந்தபட்ச பலப் பிரயோகம் என்ற காரணத்தால் அங்கீகரிக்கப்பட்டபோதிலும் ஏற்றுமதி உற்பத்தி வலயத்தக்குள் நுழைந்து ஊழியர்களைத் தாக்குவதோ அல்லது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதோ அதிகார வரம்பை மீறிய குற்றச் செயல் என்றும் குழு தனது முடிவுரையில் குறிப்பிட்டுள்ளது.

 

இமஉஆகு விசேட குழுவானது தனது முடிவுரையில் கீழ்வரும் விடயங்களை முன்வைத்துள்ளது. “ஊழியர்கள் போன்ற சாதாரண மக்களுக்கு வசதிகளை வழங்கும்பொழுது அவர்களுடன் சம்மதத்துடன் திட்டங்களை மேற்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. அவ்வாறு நடக்கத் தவறினால் அதனை எதிர்த்து நிகழும் போராட்டங்களினால் ஏற்படுத்தப்படும் சேதங்களுக்குப் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே இச்சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு அரசாங்கமே ஈடு செய்ய வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஐந்து பேர் அடங்கிய இக்குழுவில் கே.ரி.கே.பி அறம்பத் (குழுவின் தலைவர்) கலிஸ்டஸ் அருணகுமார நிஹால் விதானபத்திரண என்.எல்.கே. கலாம் மற்றும் ஏ.எஸ். நிகந்த ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.