• Human Rights Commission of Sri Lanka
  • Human Rights Commission of Sri Lanka
  • Human Rights Commission of Sri Lanka
  • Human Rights Commission of Sri Lanka
எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடன் பிறந்தவர்கள், கௌரவத்திலும் உரிமையிலும் சமமான உரிமை கொண்டவர்கள்/ எவரையும் தன்னிச்சையாகக் கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ முடியாது/ எவரையும் அடிமையாக நடாத்தவோ அல்லது அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவோ அல்லது அடிமை வியாபாரத்தில் ஈடுபடுத்தவோ முடியாது. எந்த ஒருவரையும் சித்திரவதைக்கு உட்படுத்தவோ, கொடூரமாக நடாத்தவோ, இழிவாக நடாத்தவோ அல்லது தண்டனைக்குட்படுத்தவோ முடியாது. சட்டத்தின் முன் எந்த ஒரு தனி நபரும் மனிதனாக அங்கீகரிக்கப்படுவதற்கு உரிமை உள்ளவர். அனைவருக்கும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கும் உரிமை உள்ளது. தன்னுடைய நாட்டின் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு எவர் ஒருவருக்கும் உரிமை உள்ளது. தன்னுடைய நாட்டின் பொதுச் சேவைகளை சமமாகப் பெற்றுக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது/ சிந்திப்பதற்கு, மனச்சாட்சியின் படி நடப்பதற்கு, விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கு குழந்தைக்கு உள்ள சுதந்திரத்தை அரச தரப்பினர் மதிக்கின்றனர்/ அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கும் குழந்தைக்கு உரிமை உள்ளது என்பதை அரச தரப்பினர் அங்கீரித்துள்ளனர்/ குழந்தையின் உளநல, உடல் நல, ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிமுறையுடனான சமூக அபிவிருத்திக்குமான எல்லா குழந்தைகளுக்குமான உரிமையை அரச தரப்பினர் அங்கீகரித்துள்ளனர்/ சாத்தியமான ஒவ்வொரு வழிமுறைகள் ஊடகவும் உயர் கல்வியை அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக்குதல்/ தம்மால் அடையக்கூடிய அதிகபட்சமான சிறந்த உடல் உள ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவருக்கும் உள்ள சுதந்திரத்தை உறுதி செய்தல்.

சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் சமூக நிறுவனங்களுடனான கலந்துரையாடல் ஒன்று கடந்த டிசம்பர் 5 2011 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது. சிவில் சமூக அமைப்புக்களுடன் இமஉஆகு கிரமமாகக் கலந்துரையாடுவது முக்கியமானது என சட்டம் மட்டும் சமூக நம்பிக்கை நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் தெரிவித்தனர். தவிசாளரான நீதிபதி பிரியந்த ஆர்.பி.பெரேரா, ஆணையாளர் திரு.ரி.ஈ.ஆனந்தராஜா, இமஉஆ செயலாளர், மேலதிக செயலாளர் மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இமஉஆகு வின் நான்கு பிரிவுகளினதும் இயக்குனர்கள் தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தனர். ஆணையாளர் ரி.ஈ. ஆனந்தராஜா Read More>>

“பாடசாலைக் கல்வித் திட்டத்தில் மனித உரிமைகளையும் ஒரு அலகாக உள்ளடக்குவதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் மனித உரிமைகள் பற்றிய ஆழமான அறிவைக் கட்டியெழுப்ப முடியும்” இவ்வாறு சர்வதேச நியாயாதிக்க சபையின் முன்னாள் நீதிபதியாகவும் உப தலைவராகவும் செயற்பட்டவரும் இலங்கை மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் விளங்கிய நீதியரசர் சி.ஜி. வீரமந்திரி அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும்பொழுது தெரிவித்தார். மனித உரிமைகளைப் பாடத்திட்டத்தில் இணைக்கும் திட்டமானது இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.   கடந்த டிசம்பர் 9, 2011 அன்று இலங்கை மனித  Read More>>

2009 ஆண்டறிக்கையை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது

2009 மற்றும் 2010 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கையை வெளியிடுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொண்டதையடுத்து 2009 ஆம் ஆண்டுக்கான அறிக்கை 07.11.2011 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் தவிசாளர் நீதவான் பிரியந்த ஆர்.பி.பெரேரா அவர்களிடம் இது கையளிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஆணையாளர்கள் கலாநிதி எம்.ஏ.ஜே மென்டிஸ் மற்றும் திரு.ரி.ஈ. ஆனந்தராஜா     ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

புதிய பணிமனையில் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 07.12.2011 முதல் இல 165, கின்சி வீதி கொழும்பு 08 எனும் முகவரியில் அமைந்துள்ள ‘ஆவரணய’ என்ற பெயரைக் கொண்ட புதிய கட்டடத்தில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.   மிகக் கோலாகலமாக இடம்பெற்ற இத்திறப்பு விழாவின் முதல் நிகழ்வாக ஆணைக்குழுவின் தவிசாளர் உறுப்பினர்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் ஆகியோர்களும் ஏனைய விருந்தினர்களும் இலங்கைப் பொலிசாரின் கலாசாரப் பிரிவின் மங்கள வாத்தியங்கள் சகிதம் நுழைவாயிலிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்தை தவிசாளர் நீதவான் ஆர்.பி.பெரேரா நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.   அடுத்த சம்பிரதாய நிகழ்வாகப் பால் காய்ச்சப்பட்டதன் பிற்பாடு தேசிய Read More>>

புதிய நிகழ்வுகள் இன்னும் சேர்க்கப்படவில்லை